**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

வியாழன், 29 ஜனவரி, 2009

சூலூரில் கருப்புக்கொடி......


ஈழத்தமிழரைக் காக்க இந்திய அரசை வலியுறுத்தி இன்று முதல் (30.1.09) சூலூர் முழுவதும் வீடு,வாகனம்,அலுவலகம் மற்றும் உடைகளில் கருப்புக்கொடி ஏற்றுவதென நேற்றிரவு பேரவையில் கூடி தீர்மானம் போடப்பட்டுள்ளது.
அதனையொட்டி இன்று பேரவைத் தோழர்கள் க.தேவராசு,ஆசிரியர் ப.வேலுமயில், ச.அங்கமுத்து, ப.குமரவேல், இரா.பன்னீர்செல்வம், மற்றும் இளைஞர் சக்தி அமைப்பாளரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி பொறுப்பாளர் சூ.சு.தமிழரசன் அவர்களும் திருச்சி சாலைக் கடைகளில் கருப்புக்கொடி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நேற்று ஈழத்தமிழருக்காக தன் உயிரை ஈகம் செய்த தோழர் கு.முத்துக்குமார் அவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் வீரவணக்கத்தையும் பேரவை தெரிவித்துக்கொள்கிறது.
-சூலூர் பாவேந்தர் பேரவை.